
கம்பஹா - திவுலப்பிட்டி நகரத்தில் இரண்டு கஜமுத்துக்களுடன் இளைஞன் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலபிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்த இரண்டு கஜமுத்துக்களையும் 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.