இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் -மலையக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் மோடி !


இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என மலையக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என்று மேலும் தெரிவித்தார்.