புல்மோட்டையில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 05 சந்தேக நபர்கள் கைது


புல்மோட்டையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை இறக்காமம் பகுதியில், சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டையில் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சனிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 27, 32, 37, 42 மற்றும் 44 வயதுடைய திரியாய, பிங்கிரிய, மாத்தளை, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைதானவர்கள் 05 படகுகள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.