கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களில் கல்வி பயின்று இம்முறை G.C.E O/L பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவில் (2027 Batch) கல்வி கற்க ஆர்வமுள்ள, அடிப்படை வசதிகளற்ற பாடசாலை மாணவர்களின் நன்மை கருதியும், திறமையிருந்தும் அதற்குரிய வசதி வாய்ப்புகள் அற்ற மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டும் பல்கலைக்கழகத்திற்கு அதி கூடிய வீதமான மாணவர்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கும் இலங்கையின் முன்னணிப் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரி சிரேஸ்ட ஆசிரியர்களினால் எதிர்வரும் 23.04.2025 அன்று பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது.
இத்திட்டம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முதலாவது தொகுதி மாணவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்கள். இவர்களின் கணிசமான தொகையினர் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவார்கள் என்று இவர்களை தொடர்ந்து ZOOM தொழில்நுடபத்தினூடாகக் கற்பித்த யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
இதற்குரிய முழுமையான நிதியை வழங்கி, மேற்பார்வை வழிகாட்டல்களை சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்
2024 ஆண்டு முதற் தடவையாக மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாணவர்கள் உள்வாங்கப்பட்டதை தொடர்ந்து . 2025 இல் இவர்களுடன் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள மாணவர்களும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர், இதன் தொடர்ச்சியாக 2026 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் அடங்கலாக மாணவர்கள் கற்றலை மேற்கொண்டு பயனடைகின்றார்கள். மேலும் இத் திட்டம் கல்விச் சமூகத்தினால் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
திறமையுள்ள சாதிக்கத் துடிக்கும் கஷ்ட அதிகஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றது. யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர்களும், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினரும் இவ்வகுப்பில் இணையும் மாணவர்களின் வரவு திருப்திகரமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன், பொருத்தமான மாணவர்களை இணைத்துக் கொள்வதில் மிகவும் நேர்த்தியுடன் செயற்படுகின்றார்கள். 2027 G.C.E A/L கணித விஞ்ஞானப் பிரிவில் கற்க விரும்பும் மேற் குறிப்பிட்ட மாணவர்களை உள்வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலைக்கல்விக்கு மேலதிகமாக க.பொ.த உயர்தரத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு ஏற்ற வகையில்
- அரச பாடத்திட்டத்தின் படி ஒவ்வொரு பாடத்திற்கும் 600 பாடவேளை அல்லது 400 மணித்தியாலயங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எமது திட்டத்தினூடாக பௌதிகவியல் : 800 மணித்தியாலயங்கள் , இரசாயனவியல் : 700 மணித்தியாலயங்கள் , உயிரியல் அல்லது இணைந்த கணிதம் : 500 மணித்தியாலயங்கள் கற்பித்தல்
- பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், உயிரியல் ஆகிய ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் என்ற முறையில் கற்பித்தல்
- 2027 உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் குறைந்தது 6 தவணைப் பரீட்சைகள் நடைபெறுதல்
- 10 வருடங்கள் வரையிலான கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் ( Exam Past Papers ) மீட்டல் மேற்கொள்ளுதல்
- வருடத்திற்கு ஒரு முறை என க .பொ.த உயர்தர பரீட்சைக்கு முன் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொண்ட செயன்முறை பரிசோதனை பயிற்சிக்காக ( Practical ) யாழ் இந்து கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து செல்லுதல்
- சங்காரவேல் பவுண்டேசனினால் இத்திட்டத்தில் இணைந்து கொண்ட மாணவர்களின் இருப்பிடத்திற்கு வருடத்திற்கு மூன்று முறை விஜயம் செய்து அடைவு மட்டத்தை ஆய்வு செய்தல்.
என வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024, 2025, 2026 க.பொ.த உயர்தரம் போன்று இக் கல்வி திட்டத்திற்கு 2027 க .பொ.த உயர்தர மாணவர்களுக்கும் சங்காரவேல் பவுண்டேசனின் முழு நிதி அனுசரணையும் மற்றும் வழிகாட்டலும் வழங்கப்படும்
இத் திட்டத்தில் இணைய விரும்புகிற மாணவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு WHATSAPP இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் .
கடந்த 2024, 2025, 2026 க.பொ.த உயர்தரம் போன்று இக் கல்வி திட்டத்திற்கு 2027 க .பொ.த உயர்தர மாணவர்களுக்கும் சங்காரவேல் பவுண்டேசனின் முழு நிதி அனுசரணையும் மற்றும் வழிகாட்டலும் வழங்கப்படும்
இத் திட்டத்தில் இணைய விரும்புகிற மாணவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு WHATSAPP இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் .
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இலக்கம் ( WHATSAPP ) : 0756907710 , 0776371908 , 0722385747 , 0777033014
![]() |
யாழ் இந்து கல்லூரி ஆசிரியர்களின் மட்டக்களப்பு , முதலைக்குடா கள விஜயம் |
![]() |
மாணவர்கள் ZOOM ஊடான கற்றலின் போது |
![]() |
யாழ் இந்துக்கல்லூரியில் செயன்முறை பயிற்சியின் போது |
![]() |
தொண்டமானாறு வெளிக்கள கல்வி நிலையத்தில் |
![]() |
மாணவர்களுக்கு TAB வழங்கப்பட்டபோது |
![]() |
பதுளை சார்னியா தமிழ் மகாவித்தியாலயத்தில் |
![]() |
கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலை , வாகரை |
![]() |
சென். ஜோன்ஸ் கல்லூரி , இறக்குவானை, இரத்தினபுரி |