
பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கும் அடுத்த சில மணிநேரங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (16) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களைக் கோரியுள்ளது.