யோகட் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்தார்.
மில்கோ நிறுவனத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யோகட்டுடன் வழங்கப்படும் கார்ட் போர்டு கரண்டிகளை குழந்தைகள் அதிக நேரம் வாயில் வைத்திருப்பதால் அந்த கரண்டி சிறிது நேரத்தில் உருகி விடுகிறது. அத்துடன் இந்த கார்ட் போர்டு கரண்டிகள் குறித்து வாடிக்கையாளர்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு யோகட்டுடன் மரக்கரண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் இந்த மரக்கரண்டிகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படாமையால், அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.