மனித பாவனைக்குதவாத தேயிலைத்தூளுடன் இருவர் கைது !


கம்பஹா தங்கோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி- கொழும்பு வீதியில் மனித பாவனைக்குதவாத தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் தங்கோவிட்ட பொலிஸாரால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் லீமஹகொட்டுவ மற்றும் ஹன்தெஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 55 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5,031 கிலோ கிராம் நிறையுடைய தேயிலைத் தூள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.