மட்டக்களப்பு, வந்தாறுமூலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் (SLAS) ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து பொறுப்புமிக்க உயர் பதவிக்கு இளம் வயதிலே தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். சஞ்ஜீபன் கிழக்கு பல்கலைக்கழகம், மட்/புனித மிக்கேல் கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.