பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழுக்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை அவமதித்து தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.