.jpg)
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்ட ஒத்கெலே மற்றும் ஹல்லக்கட சதுப்பு நிலப் பகுதிகளில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 32 மற்றும் 50 வயதுடைய ஏக்கல மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதன்போது, ஒத்கெலே பகுதியிலிருந்து 40,500 லீற்றர் (200 பீப்பாய்கள்) கோடா, 843 லீற்றர் சட்டவிரோத மதுபானமும், ஹல்லக்கட பகுதியிலிருந்து 5,481 லீற்றர் (29 பீப்பாய்கள்), 225 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 03 செப்பு சுருள்கள் மற்றும் 02 எரிவாயு அடுப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.