பிக்கு ப டு கொ லை தொடர்பில் வெளியாகிய மேலதிக தகவல் !


அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் தொலைபேசித் தரவை பகுப்பாய்வு செய்த போது கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அனுராதபுரம், எப்பாவல, கிரலோகம பிரதேசத்தில் உள்ள மடம் வசித்து வந்த பிக்கு ஒருவர் அந்த விகாரையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட நபர் கிரலோகமவில் உள்ள ருக்சேவன மடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றிய 69 வயதான விலச்சியே பிரேமரத்ன தேரர் ஆவார்.

அவரது உடலின் பல பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.

இதேவேளை, எப்பாவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில், கைவிடப்பட்ட நிலையில் பிக்குவுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பொலிஸார் கண்டுபிடித்ததோடு, அதன் சாரதியைக் காணவில்லை.

பின்னர், அனுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் திலின ஹேவாபதிரனவின் அறிவுறுத்தலின் பேரில், எப்பாவல பொலிஸாரால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, காணாமல் போனவரின் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், அவர் கட்டுநாயக்க பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பொலிஸ் விசாரணையின் போது, ​​கொலை செய்யப்பட்ட பிக்குவுடன் ஏற்பட்ட மிகவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தான் கொலையைச் செய்தவிட்டு, தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.