# # # # # # # # #

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு


மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார். 

சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் - கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்