மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை சந்தேகநபர் ஒருவர் தொலைபேசி ஊடாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வைத்தியசாலை தொலைபேசி பரிவத்தனை நிலையத்துக்கு இனம் தெரியாத ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் ஊழியர்கள் மற்றும் பெண் வைத்தியர்கர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வைத்தியர்கள், ஊழியர்கள் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் குற்றவியல் பிரிவிற்கும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.