இந்தியா நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்றைய தினம் காலை 11.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 400 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.