கடலோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவ, எகொடஉயன ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இருப்பினும், இடிந்து விழுந்த நேரத்தில் பாலத்தில் யாரும் நடந்து செல்லவில்லை என்றும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (26) இரவு 7.40 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி நோக்கி ரயில் சென்ற சிறிது நேரத்தில் குறித்த பாலம் இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.