காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஆரையம்பதி பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த BOLERO ரக வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதிலே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
இவ் விபத்தில் இரு வாகனங்களுக்கும் சிறு சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்தோருக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.