சாதாரண தரப் பரீட்சை நிலையங்களைச் சுற்றி சிறப்பு பாதுகாப்புத் திட்டம் !


நாடளாவிய ரீதியில் நாளை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள், பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 3,663 மையங்களில் பரீட்சை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 478,182 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

அவர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர் என்றும் பரீட்சைத் திணைக்களம் மேலும் கூறப்படுகின்றது.

பரீட்சை நிலையங்களைச் சுற்றி சிறப்பு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.