ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர், இருபதாயிரம் ரூபா லஞ்சம் பெறும் போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புதையல் வழக்கு தொடர்பாக பிரதிவாதிகளிடமிருந்து இந்தப் பணத்தைப் பெற சார்ஜென்ட் திட்டமிட்டிருந்தார்.
சந்தேகத்திற்குரிய சார்ஜென்ட் நீதிமன்ற கழிப்பறையில் லஞ்சம் பெற்ற போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.