நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு !


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் புத்தளம் உயர் நீதிமன்றத்தால் கடந்த 28 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் சட்டதரணியை விடுதலை செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.

பெண் சட்டதரணி நீதிமன்றத்திற்கு தலைவணங்காமல் உள் நுழைந்தமையானது நீதிமன்றுக்கு உரிய மிரயாதையை செலுத்த தவறியமைக்குச் சமம் என்ற குற்றாச்சாட்டின் கீழ் புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகொட சட்டதரணியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளை, மார்ச் மாதம் 7 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்ட நபரொருவருக்கு பிணை கோரி வழக்கில் ஆஜரானபோது நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்தாமல் வாதாடினார் என சட்டதரணிக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பெண் சட்டதரணியின் சார்பாக இலங்கை சட்டதரணிகள் சங்கம் (BASL) கோரிய அவசர விசாரணையைக் கருத்தில் கொண்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்து விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

பெண் சட்டதரணி சார்பில் சாலியா பீரிஸ் மற்றும் பைஸர் முஸ்தபா உட்பட சட்டதரணிகள் குழு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.