நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை - யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.