மினுவாங்கொடை புனர்வாழ்வு நிலையத்தில் திடீரென சுகயீனமுற்று ஒருவர் உயிரிழப்பு !


கம்பஹா, மினுவாங்கொடை பன்சில்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நபரொருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையான இவர் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீண்ட நாட்களாக புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து இவர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.