
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கோடா மற்றும் வடிசாராயத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆரையம்பதி பகுதியில் வீட்டில் வடிசாராயம் தயாரித்து கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 570 லீற்றர் கோடா அடங்கிய நான்கு பரல்களுடனும் 30 லீற்றர் வடி சாராயம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.