மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது


மொரட்டுவை பொலிஸ் பிரிவின் தந்தேனியவத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையின் போது 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை ( 17) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் , இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். .