வேட்புமனு நிராகரிப்பு - பரிசீலனைத் திகதி அறிவிப்பு !




உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களின் பரிசீலனைக்காக திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனுக்களை ஏப்ரல் 1 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று (28) நீதிபதிகளான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோ ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான உண்மைகளை தேர்தல் ஆணைக்குழு ஆய்வு செய்து வருவதாகவும், அதன் முடிவை அறிவிக்க திகதியைக் கோரியுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அதன்படி, மனுவை அடுத்த மாதம் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, அன்றைய தினம் இந்தக் கோரிக்கை தொடர்பான சமர்ப்பணங்களை பரிசீலிப்பதாகவும் அறிவித்துள்ளது.