ஹசீஸ் போதைப்பொருளுடன் சமையல்காரர் கைது !


08 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் சமையல்காரர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பாணந்துறை தெற்கு, அளுத் பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அலுபோமுல்ல, பமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய சமையல்காரர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 870 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.