வனவிலங்கு அலுவலக அதிகாரி மாயம்; பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் !


புத்தளம் மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் பணிபுரியும் மேலதிக நிர்வாக வன அதிகாரி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அவர் மே 2017 முதல் காணாமல் போயுள்ளார்.

வனவிலங்கு அதிகாரியின் மனைவி 2017 மே 30 அன்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் 2023 நவம்பர் 17 அன்று குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிட்டம்புவவையைச் சேர்ந்த 47 வயது நபரைக் கண்டுபிடிக்க சிஐடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.