மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார்.
பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார்.
இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.