ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்; முன்னனி சோசலிசக் கட்சி !



பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுக்கு கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன.மேலும் காலம் தாழ்த்த வேண்டாம்.சாட்சி வழங்கியவர்கள் வயது சென்று மரணிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? எனவே பார்த்து கொண்டிருக்க வேண்டாம்.தற்போதைய அரசாங்கம் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் போது இரண்டு சட்டங்கள் உள்ளன.ஒன்று 1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம்.மற்றையது 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டம்.1948 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் அந்த ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமை இரத்து செய்யுமாறு கூறும் அதிகாரம் இல்லை.அந்த 1978 ஆம் ஆண்டும் சட்டத்தில் அந்த அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவை சந்திரிக்கா ஆராய்ந்தார். அவரது நண்பரை பாதுகாப்பதற்காக 1978 கொண்டு வந்த சட்டம் அதுவல்ல.ஆனால் அது 1948 ஆம் ஆண்டு சட்டத்துக்கு அமையவே அது இடம்பெற்றது.

பட்டலந்த விவரகாம் தொடர்பான அதிகாரம் மேற்கொண்ட ஆணைக்குழுவுக்கு பிரஜா உரிமையை நீக்குவதற்கான அதிகாரம் வழங்க்படபவில்லை.இங்கு ஆட்கொலை இடம்பெற்றுள்ளது. ஆட்கொலை, அரச துரோகங்களுக்கு வேறு சட்டங்கள் தேவையில்லை.அது அறிந்த காலப்பகுதியில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.எனவே இங்கு வேறு விடயங்களை கூறிக்கொண்டிருக்க தேவையில்லை. ஆட்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுங்கள்.குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு உத்தரவு விட முடியும்.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூற முடியும்.எனவே ரணிலை கைது செய்யுங்கள்.டக்லஸ் பிரீஸை கைது செய்யுங்கள்.தான் மரணித்து விட்டதாக பகிரங்கப்படுத்தியுள்ளார். எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் இன்னும் உயிரிழக்கவில்லை. தாம் வாழும் போது உயிரிழந்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்புவது பாரிய குற்றமாகும்.அங்கு இடம்பெற்ற துன்புறுத்தலில் சுனில் தெல்கொட பிரதான நபர்.அவரையும் கைது செய்யுங்கள்.அங்கு கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுங்கள்.

அங்கு பணியாற்றி ஒய்வுப்பெற்ற ஒருவர் அண்மையில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.சிலர் பாலியல் ஆசைகளை நிறைவேற்றி விட்டு அந்த இளைஞர்களுக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன.

அதேபோன்று சுதத் சந்திரசேகரை கைது செய்யுங்கள். ரணிலின் சீடராகவே சுதத் சந்திரசேகர செயற்பட்டார்.அந்த பதவியில் இருந்து விலகிச்செல்லும் அவர் கடிதமொன்றை எழுதி இருந்தார்.நான் உங்களுக்காக பல விடயங்களை செய்துள்ளேன். பட்டலந்தவில் மக்களை நீங்கள் கொலை செய்யுமாறு கூறியதன் பின்னர் நான் அதனை செய்தேன் என அவரது கையெழுத்தினால் அவர் கடிதமொன்றை எழுதியுள்ளார்.ஒருவர் தாம் கொலை செய்துள்ளதாக பகிரங்கமாக கூறும் போது ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை வேண்டுமா? எனவே நீதியை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள்.

இது அரசியல் பழிவாங்கல் அல்ல.இது ரணில் அல்லது வேறு எவரிடமோ மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல் அல்ல.எமது ஆயிரம் கணக்கான இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமானால் நாம் அதற்கு மன்னிப்பு வழங்குவோம்.பட்டலந்த சித்திரவதை முகாம் ஆட்கொலை விவரகத்துடன் ரணில் மத்திரம் தொடர்பு படவில்லை.மாத்தளை விஜய கல்லூரி புதைகுழி சம்பவம் தொடர்பில் கோட்டாபய பொறுப்புக்கூற வேண்டும். எனவே நீதி கிடைக்கவேண்டும்.மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். அப்பாவி மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை சமூக அறிந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.அது அரசியல் பழிவாங்கல அல்ல என்றார்.