அதன்படி, 309 ரூபாயாக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 361 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி தொடரும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் லங்கா ஒயிட் டீசலின் விலை ரூ. 286 ஆகவும், லங்கா சூப்பர் டீசலின் ஒரு லிட்டரின் விலை ரூ. 331., மேலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 183 ரூபாய் ஆகவும் மாற்றமின்றி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை IOC, சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை நிர்ணயத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.