பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி !


அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது.

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகப் பாடசாலை முறையைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்று மட்டுமே தான் கூறியதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமரின் தடையை மீறி ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்று SLPP பாராளுமன்ற உறுப்பினர் DV சானக கூறியதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஒரு பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அப்படியென்றால் ஆளும்கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்கட்சிக்கு ஒரு நியாயமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என சானக்க தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ”நான் அவ்வாறு தடை விதிக்கவில்லை. அப்படி எந்த சட்டமும் இல்லை. அந்த ஊடக அறிக்கை தவறானது” என்றார்.