குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (17) மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள காவலில் உள்ள சந்தேக நபர், இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், தொடர்புடைய குற்றச்சாட்டு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகைகளைப் பேணுவதற்கான திறன் குறித்து ஆரம்ப ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
பின்னர் விசாரணை நடவடிக்கைகளை ஏப்ரல் 4 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மற்றொரு பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.