போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையம் முற்றுகை - ஒருவர் கைது!


சீதுவ பகுதியில் போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 56 வயதுடைய நபரே கைதாகியுள்ளார்.

மேலும் இதன்போது 3 போலி இலக்கத் தகடுகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முத்திரை பதித்த ஸ்டிக்கர்கள், தேசிய சின்னம் பொறித்த 67 ஸ்டிக்கர்கள் மற்றும் இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.