லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்



எரிவாயு விலையின் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை (05) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்றையதினம் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலை அடுத்து திருத்தம் செய்யப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.