யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 20 லிட்டர் கசிப்பு அடங்கிய ஆறு பீப்பாய்கள், கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.