நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சின் கீழ் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (24) வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது,
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு தழுவிய ரீதியில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 43.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
எனினும் நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு அபாயம் மேலும் அதிகரிக்கலாம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகையால் நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சின் கீழ் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் 37 அதிஉயர் டெங்கு அபாயம் மிக்க சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தியும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன்போது வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளிலும் அதிகாரிகள் குழு கள ஆய்வினை மேற்கொள்ள உள்ளது.
இப்பணியில் சுகாதார ஊழியர்கள், முப்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களை செலவழித்து தாம் வசிக்கும் சுற்றுப்புற சூழலில் உள்ள நுளம்பு பெருகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை தூய்மைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனை அல்லது தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவுருத்தியுள்ளது.நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சின் கீழ் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (24) வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது,
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு தழுவிய ரீதியில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 43.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
எனினும் நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு அபாயம் மேலும் அதிகரிக்கலாம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகையால் நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சின் கீழ் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் 37 அதிஉயர் டெங்கு அபாயம் மிக்க சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தியும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன்போது வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளிலும் அதிகாரிகள் குழு கள ஆய்வினை மேற்கொள்ள உள்ளது.
இப்பணியில் சுகாதார ஊழியர்கள், முப்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களை செலவழித்து தாம் வசிக்கும் சுற்றுப்புற சூழலில் உள்ள நுளம்பு பெருகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை தூய்மைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனை அல்லது தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவுருத்தியுள்ளது.