மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை தொடர்ந்து பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலி ரத்னாவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி ஏற்பு நிகழ்வில் மாவட்டத்தின் 15 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியாச்சகர்கள்,உட்பட மாவட்டத்தின் பிரதான பொலிஸ் அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்
மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த ஜகத் நிசாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சர்வ மத ஆசீர்வாதங்களை தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம் பெற்றன.