ஆரையம்பதியில் வாள்வெட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம் - பொதுமக்கள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


(க.விஜயரெத்தினம்)

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும்,கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நிதியினை வழங்கக்கோரியும்,அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (3) காலை மணியளவில் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

ஆரையம்பதி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு கடுமையான தண்டனையை  பிரதேச செயலாளர் பெற்றுத் தர வேண்டும் எனவும் போலீசார் சரியான முறையில் நீதி பெற்றுத்தரவில்லை எனவும் இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச பொதுமக்களினால் "வாள்வெட்டு கும்பலை ஆரையம்பதி பிரதேசத்தில் இல்லாமல் ஒழிப்போம்",வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்",வன்முறை சூத்திரதாரிகளை சிறையில் அடை","சுத்தமான இலங்கையில் சூத்திரதாரிகளை ஒழி", பாதாதை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இது சம்பவத்தை மண்முனைப்பற்றில் உள்ள பொதுமக்கள்,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குரிய மகஜரை மண்முனைப்பற்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.மேலும் கிழக்கு மாகாண பொலிஸ்மாதிபர்,மாவட்ட செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியனின் செயலாளரிடமும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமாறும் உரிய அதிகாரிகள் கோரிக்கை மகஜர்கள் கையளிக்கப்பட்டது.