யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நபர் ஒருவர் தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு தினமும் மதுபோதையில் வரும் நபர் பெண் பிள்ளைகள் இருக்கும் அயல் வீட்டாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தி வருகின்றார்.
மதுபோதையில் தினமும் அயல் வீட்டாரை அச்சுறுத்தி அநாகரிக செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர் ஈடுபடுவதால் உயிருக்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை எடுக்குமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.