தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது


தெஹிவளை நகரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (14) கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கரகம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.