‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை !


‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததுடன் இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன் பட்டலந்தா அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.