மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பகுதியில் வசிக்கும் 72 வயதுடைய முதியவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று, எயார் ரைபிள் ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 49 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.