மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் டி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த டி-56 ரக துப்பாக்கியும் வெற்று மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் பகுதியாகவிருந்து பின்னர் படைமுகாமாக செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மெகசின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.