நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது!



நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் சேரம் வீதி பகுதியில், 196 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 686 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதான சல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொரளை பொலிஸ் பிரிவின் பொஸ்னியா வத்த பகுதியில் 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொரளை மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர்களாவர்.

அத்தோடு, தனமல்வில - மஹவெவ பகுதியில் 11 கிராம் 470 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,500 ரூபா பணத்தொகை மற்றும் தொலைப்பேசியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சூரிய - ஆர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

மேலும், குறித்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.