மண்டூர் 13 இல் சிடாஸ் கனடா அமைப்பினரால் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பம்

(சித்தா)

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் 10 கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு விஞ்ஞானம், கணிதம், தமிழ், ஆங்கிலம்  ஆகிய பாடங்களுக்கான விஷேட வகுப்புகளின் ஆரம்ப நிகழ்வு இன்று 2025.03.31 திங்கட் கிழமை  காலை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் துரைராசா சபேசன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வில் வித்தியாலய பிரதி அதிபர் சோமசுந்தரம் தேவநேசன் மற்றும் வளவாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோருடன் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் முத்துராஜா புவிராஜா, உறுப்பினர் கணபதிப்பிள்ளை லிங்கராஜா ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். மேலும் இப்பாடசாலைக்கான செயற்றிட்டத்தின் முதலாவது தொகுதி மாணவர்கள் 2025 மார்ச்சு மாதம் நடைபெற்ற க.பொ.த. சா/தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் செயற்றிட்டத்திற்கான அனுசரனையை சிடாஸ் கனடா அமைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.