# # # # # # # # # # # # # # # #

சொத்து குத்தகை , வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு !


சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, ​குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி அல்லது வாடகைக்காக ஒவ்வொரு 1000 ரூவாவிற்கும் அதன் ஒரு பகுதிக்காகவும் 10 ரூபாய் முத்திரை கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.

எனினும் குறித்த முத்திரை கட்டணம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20 ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில் அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி திருத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது விசேட அம்சமாகும்.

இருப்பினும், நுகர்வோர் கடன் சட்டத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட முழு உரிமையுடைய ஒப்பந்தத்தின் கீழ் செலுத்த வேண்டிய மொத்த மதிப்பில் 1,000 ரூபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்காக அறவிடப்படும் முத்திரை கட்டணம் திருத்தப்பட மாட்டாது நிதியமைச்சு தௌிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, பத்து ரூபாயான அந்த முத்திரை வரி தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.