மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு !


மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் ஆவார்.