நீர்கொழும்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சமிந்த ஹெவத் மிரிஸ் அந்தனி என்பவரின் மூத்த மகனை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும், துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்ததினால் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் உதவியாளர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும், அவர் அதனைத் தர மறுத்ததால் இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.