பட்டிருப்புக்கல்வி வலயத்தில் மாணவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல் தொடர்பான பெற்றோருக்கான விழிப்புணர்வு
















(சித்தா)

பட்டிருப்பு கல்வி வலயத்தில் GEMP நிகழ்ச்சித்திட்டத்தினூடாக Conducting awareness programme for parents creating learning environment to children in home  பாடசாலைகளில் தரம் 3-10 வரையான வகுப்புக்களில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆங்கிலத்தை மாணவர்கள் பேசுவதற்கான வீட்டுச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் அதற்காக பெற்றோர் ஊக்குவிக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் அவர்களின் வழிகாட்டலில் முறைசாராக் கல்விப்பிரிவு, ஆங்கிலக் கல்விப்பிரிவும் இணைந்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து அது வீட்டுச்சூழலில் எவ்வாறு  பின்பற்றப்படுகின்றது என பாடசாலைச்சமுகத்தால் அவதானிக்கப்பட்டு அதில்  தெரிவு செய்யப்பட்ட குழுவினரினால் இல்லத் தரிசிப்புகளை மேற்கொண்டு சிறப்பாக காணப்பட்ட கற்றல் சூழலைக்கொண்ட மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில் மற்றும், சான்றிதழ் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அதில் இன்று மட்/பட்/களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மத்தியநிலையத்தில் அதிபர் திருமதி ஸ்ரீ.வேழவேந்தன் தலமையில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து பரிசில்கள், சான்றிதழ்  வழங்கி  பாராட்டியதுடன் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ள பெற்றோரும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.