கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், குறித்த பேரூந்து பொகவந்தலாவ நகருக்கு வந்ததன் பின் அவரை சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.