கண்டியில் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் : மக்களுக்கு எச்சரிக்கை !


கண்டி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கண்டி தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 39 நாட்களில் மொபைல் போன்கள் திருடப்பட்டது தொடர்பாக 80 முறைப்படுகள் கிடைத்துள்ளன.

மேலும், பதிவு செய்யப்படாத பல சம்பவங்கள் இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர். பேருந்துகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்த திருட்டுகள் நடப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கண்டி நகரத்திலிருந்து செல்லும் பேருந்துகளில் இந்த சம்பவங்கள் பெரும்பாலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறையில் மொபைல் போன்களைத் திருடும் பல நபர்கள் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.